தேசிய கொடியை கொண்டு சென்றதாக நெல்லியடியில் இருவருக்கு விசாரணை
யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனராம் என அறியப்படுகிறது. 
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
யாழ். நெல்லியடிப் பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் மோட்டர் சைக்கிளில் வந்த நபர்களினால் புலிக்கொடி காட்டப்பட்டது. குறித்த மோட்டர் சைக்கிளின் இலக்கத்தகடுகள் புலன் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டர் சைக்கிளின் இலக்கத் தகடு ஒன்று மோட்டர் சைக்கிளுக்கு உரியது எனவும் மற்றையது முச்சக்கரவண்டிக்குரியது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மோட்டர் சைக்கிளின் இலக்கத் தகட்டின் அடிப்படையில் அதன் உரிமையாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே தென்பகுதியைச் சேர்தவர்கள் எனவும் சிங்களவர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதாக தெரியவருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் வருகை தர மறுக்குமிடத்து கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஆகமொத்தத்தில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு வேலைசெய்பவர்களே புலிக்கொடியக் காட்டிவிட்டுச் சென்றார்கள் என்பதனை பொலிஸ் மா அதிபர் சொல்லாமல் சொல்லுகிறார் போல !
மேலும் செய்திகள்:
..பார்வையாளர்கள்

