Get Adobe Flash player

காணாமல் போனோர் பற்றிய விபரம் அடங்கிய கோரிக்கை மனு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிப்பு

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல் போனவர்களின் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 2301பேர் குறித்த முறைப்பாடுகள் நேற்று (06) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. jaffna02-300x198மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை செபமாலையின் தலைமையில் வந்த மன்னாரைச் சேர்ந்த குழுவினரே ஆணைகுழுவின் உறுப்பினர்களைச் சந்தித்து தமது முறைப்பாடுகளை கையளித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் கொழும்பு கிருலப்பனையில் உள்ள தலைமையகத்தில் வைத்து ஆணையர்களைச் சந்தித்த அந்தக் குழுவினர், ஏற்கனவே இவை குறித்து தாம் பல இடங்களில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான பலனும் கிடைக்காத காரணத்தால் இந்த ஆணைக்குழுவிலும் தாம் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆயினும் வேறுவழி இல்லாத காரணத்தால் இந்த முறைப்பாடுகளை தாம் இப்போது செய்ய வந்துள்ளதாகவும், அத்துடன் இன்னமும் பலர் நம்பிக்கை இழந்த நிலையில் முறைப்பாடு கூடச் செய்ய முன்வாராத நிலையில் இருப்பதாகவும் அருட்தந்தை செபமாலை கூறினார்.

இந்த குழுவில் காணாமல்போன சிலரது உறவினர்களான சுமார் 20 பேரும் மன்னாரில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் தமது நிலைமை குறித்து கூறுகையில், தமது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதையாவது தமக்கு அறிந்து தரவேண்டும் என்று ஆணையர்களை அவர்கள் வேண்டினார்கள்.

இவர்களுக்கு பதிலளித்து பேசிய ஆணையர்களில் ஒருவரான மனோ ராமநாதன் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று உறுதியளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறைப்பாடுகள் செய்வது குறித்து மிரட்டல் எதுவும் வரும் பட்சத்தில் அதனையும் தம்மிடம் கூறவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

104..views


ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆக...
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜிஆர் என்று கூறிக் கொள...
ரேசன் கடையில பொருட்கள் சரியாக கிடைப்பது இல்லை. காரணம். அங்குள்ள ப...
வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24ம் ...
நீ குஜராத்தில் செஞ்சதைத்தானே நான் இலங்கையில் பண்ணினேன். நீ நாற்பத...
சிறிலங்காவுடனான வர்த்தகத் தொடர்புகளை பிரித்தானியா நிறுத்திக் கொ...
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான கால...
தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள...